கொத்தலாவல சட்டத்திற்கு, அடக்குமுறைக்கு எதிராக மாணவ-மக்கள் போராட்டாத்திற்கு சர்வதேச மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன!
கல்வியை விற்பதற்கு, இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டத்திற்கு எதிராக இலவசக் கல்விக்கான மாணவ-மக்கள் இயக்கம் முன்னெடுக்கின்ற போராட்டம் தொடர்பிலும் அதற்கெதிராக அரசாங்கம் நடாத்துகின்ற மிலேச்சத்தனமான அடக்குமுறை தொடர்பிலும் சர்வதேச மாணவர் அமைப்புகளுக்கு அறிவிக்கும் செயற்பாட்டை அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கிணங்க மாணவ-மக்கள் போராட்டாத்திற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்திந்திய மாணவர் சம்மேளனமும் (AISF) அகிலநேபால் சுயாதீன மாணவர் அமைப்பும் செய்தி வெளியிட்டிருக்கின்றன. கல்வியை தனியார் மயப்படுத்தல் மற்றும் இராணுவ மயப்படுத்தலை ஏகமானதாக எதிர்ப்பதாகவும் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைத்த மாணவ-தொழிலாளத் தலைவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் எனவும் இந்நாட்டு அதிகார வர்க்கத்தின் கவனத்திற்கு கொணர்ந்திருக்கின்றன.
கல்வி தனியார் மயமாக்கல், இராணுவ மயப்படுத்தலுக்கு எதிரான போராட்டமானது எமது தேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாததோடு, வேறு நாடுகளின் மாணவர் இயக்கங்களும் பல முனைகளிலும் மேற்படி நவதாராளவாத கொள்கைகட்கு எதிராக போராடுகின்றன. ஆயின் அதிகார வர்க்கத்தின் நவதாராளவாத வேலைத் திட்டத்திற்கு சர்வதேச மட்டத்திலான ஆதரவை வளர்த்தெடுப்பது அத்தியாவசிய காரணமாகும்.
No comments:
Post a Comment