மாணவ-மக்கள் இயக்கம் தூதர்கள் சிலவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது;
இலவசக் கல்விக்கான மாணவ-மக்கள் இயக்கத்தினால் நேற்று தூதரகங்கள் சிலவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது.
01.பிரித்தானிய தூதரகம்
02.நெதர்லாந்து தூதரகம்
03.நோர்வே தூதரகம்
04.அவுஸ்திரேலிய தூதரகம்
05.சுவிட்சர்லாந்து தூதரகம்
06.அமெரிக்க தூதரகம்
07.ஐரோப்பிய தூதரகம்
இதன்போது ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மனித உரிமை ஆணைக்குழு சார்பாக பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டார். மாணவ-மக்கள் இயக்கம் சார்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் சிலவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தன.
கொத்தலாவல சட்டத்திற்கு எதிரான மாணவ-மக்கள் இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை தொடர்பில் இங்கே கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. தனிமைப்படுத்தல் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியவாறு மாற்றுக் கருத்துடையோரை கைது செய்தல், அவர்களை சிறை பிடித்து சிறையினுள் தொற்று நோய்க்கு ஆளாக்குதல், திட்டமிட்ட சதிகளை செய்தல், போலியான குற்றங்களை சுமத்தி, சில நேரங்களில் வழக்கை விசாரிக்கின்ற நீதிபதிகளே கூட விசாரணை தினத்தை வேண்டுமென்றே கண்டு கொள்ளாதுவிடல், திட்டமிட்ட வகையில் மாணவ-மக்கள் இயக்கத் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது குறித்தும், மாணவர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போன்றோரை அச்சுறுத்தும் வகையில் அவர்களை பின்தொடர்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, அரசாங்கத்தின் கடந்தகால செயற்பாடுகள் குறித்த அறிக்கை ஒன்றையும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளிநாட்டு அமைப்புகள் சிலவற்றுக்கு இதற்கு முன்பும் அனுப்பி வைத்திருப்பதோடு, ஏனைய வெளிநாட்டு தூதரகங்கள் மனித உரிமை அமைப்புகள் என்பவற்றுடன் எதிர் நாட்களில் கலந்துரையாடுவதற்கும் ஒழுங்குகளை செய்துள்ளது.
திட்டமிட்ட வகையில் கைது செய்யப்படுகின்ற, கைது செய்திருக்கின்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் அமில சந்தீப மற்றும் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயற்பாட்டாளர் சமீர கொஸ்வத்த ஆகிய தோழர்கள் தற்போது சிறையினுள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு ஏனைய தோழர்கள் மிகவும் ஆபத்தான நிலைமைகட்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகள், அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொடுக்காதது மட்டுமின்றி, ஆகக் குறைந்தது சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடுவதற்கு கூட அனுமதியளிக்காது அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு மனு ஒன்றை கையளித்திருப்பதோடு, நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு செய்திருக்கின்றது. ஆனாலும் பொறுப்புச் சொல்ல வேண்டிய குறித்த நிறுவனங்களும் எதுவித பதிலும் வழங்காது, இவ்வாறான அலட்சிய போக்கை கடைப்பிடித்து சிறை வைக்கப்பட்டு இருக்கின்ற எமது தோழர்களை வேண்டுமென்றே தொற்று நோய்க்கு பலியாக்கி படுகொலை செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஆதலால் இதுகுறித்து விழிப்புணர்வு ஊட்டக்கூடிய சகல அமைப்புகளையும் திரட்டிக் கொண்டு விழிப்புணர்வூட்டி அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும் இவர்களின் விடுதலை குறித்து தொடர்ச்சியாக இயங்குவதற்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது
No comments:
Post a Comment